Pages

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing

Lord Murugan Community

Popular Posts

Sunday, 23 August 2015

சீனர்களும் விரதமிருந்து வழிபடும் தைப்பூச விரதம்

 
தைப்பூசம் என்பது உலகெல்லாம் கட்டிக்காக்கும் அன்னை பராசக்தி மைந்தன் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் விழாவாகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பார்கள்.

தைப்பூசம் ஒவ்வொரு வருடத்திலும் தை மாதம் பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடிய நாளில் வரும். இந்த நல்ல நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவே தைப்பூச விழாவாகும்.

நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசம் விழா தமிழ்நாட்டில் பழனி, உள்ளிட்ட முக்கிய ஸ்தலங்களில் சிறப்பாக நடத்தப்படுகிறது.

இதற்காக பக்தர்கள் மாலையணிந்து விரதமிருந்து காவடி தூக்கி பாதயாத்திரையாக முருகனை தரிசிக்க பழனி நோக்கி செல்வார்கள்.

தமிழ்நாட்டில் எல்லா முருகன் கோவில்களிலும் தைப்பூச விழா சிறப்பாக நடத்தப்பட்டாலும், சிங்கப்பூர், மலேசியா நாடுகளில்தான் மிகச்சிறப்பாக இவ்விழா பக்தர்களால் விரதமிருந்து கொண்டாடப்படுகிறது.

உலகெங்கும் உள்ள பல தமிழர்கள் சிங்கப்பூர் மலேசியா நாடுகளில் இருக்கிறார்கள். மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோவில், பினாங்கு தண்ணீர்மலை முருகன் கோவில்களில் தைப்பூச விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பக்தர்களால் முருகனுக்காக பால் காவடிகள், பறவைக்காவடிகள், பால்குடங்கள் அதிகளவில் எடுத்து வந்து இந்த விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இதற்காக பக்தர்கள் கடும் விரதம் இருப்பர். மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் தீபாவளி அளவுக்கு கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகை தைப்பூசமாகும். பள்ளிகள் நிறுவனங்கள் போன்றவை விடுமுறை விடப்பட்டு சிறப்பாக கொண்டாடப்படும்.

சிங்கப்பூரிலும் முருகன் கோவில்களில் தைப்பூச விழா மிக கோலாகலமாக விரதமிருந்து கொண்டாடப்படுகிறது. தமிழர்கள் மட்டுமின்றி சீனர்களும், மலேசிய நாட்டினரும் கூட கடும் விரதமிருந்து தைப்பூச விழாவில் காவடிகள் தூக்கி முருகனை வழிபடுவது சிறப்பு.

தமிழர் மட்டுமின்றி சீனர்களும், மலேசிய நாட்டை சேர்ந்தவர்களும் முருக கடவுளை விரதமிருந்து வழிபடுவதில் இருந்தே முருகனின் பெருமை உலகமெல்லாம் பரவி பக்தர்களை எவ்வாறு பரவசப்படுத்துகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment